வணக்கம்!

உலகக்கிண்ணக் காற்பந்தாட்டம் தொடர்பான செய்திகள், தவகல்கள், அலசல்கள் என்பனவற்றைத் தமிழில் தருவதே இவ்வலைப்பூவின் நோக்கம்! விரைவில் பல பிரபல மற்றும் முன்னணி விளையாட்டு தொடர்பான பதிவர்கள் எம்முடன் இத்தளத்தில் தமது ஆக்கங்களைத் தரவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.!

தொடர்ந்து எம்மாலியன்ற வரை உலகக்கிண்ணக்காற்பந்தாட்டம் 2010 தொடர்பான அனைத்துச் செய்திகளையும், தகவல்களையும் இங்கே பதிவுசெய்யவிருக்கிறோம்!

தங்கள் வருகைக்கு நன்றி!

Friday, April 23, 2010

காற்பந்து உலகக்கிண்ணம் 2010 - அணிகள்

உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஜீன் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெற இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் கால்பந்து விளையாடும் தேசங்களிடையேயிருந்து கண்டம் / பிரதேச ரீதியாக இறுதிச்சுற்றுக்களில் தென்னாபிரிக்காவில் விளையாட 32 அணிகள் தகுதிபெற்றிருக்கின்றன. 

கண்ட ரீதியாக தகுதி பெற்ற அணிகள்

ஆசியா (ஆசிய காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • அவுஸ்திரேலியா
  • ஜப்பான்
  • வட-கொரியா
  • தென்-கொரியா


ஆபிரிக்கா (ஆபிரிக்கக் காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • அல்ஜீரியா
  • கமரூன்
  • ஐவரிக்கோஸ்ட்
  • கானா
  • நைஜீரியா
  • தென்னாபிரிக்கா (போட்டி நடத்தும் நாடு)


வட-அமெரிக்கா (வட,மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • அமெரிக்கா
  • மெக்ஸிகோ
  • ஹொண்டூரஸ்


தென்-அமெரிக்கா (தென் அமெரிக்கக் காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • ஆர்ஜன்டீனா
  • பிரேசில்
  • உருகுவே
  • பரகுவே
  • சிலி


ஓசியானியா (ஓசியானியா காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • நியூசிலாந்து

ஐரோப்பா (ஐரோப்பிய காற்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம்)

  • இங்கிலாந்து
  • ஃபிரான்ஸ்
  • ஜேர்மனி
  • டென்மார்க்
  • கிரீஸ்
  • இத்தாலி
  • நெதர்லாந்து
  • போர்த்துக்கல்
  • சேர்பியா
  • ஸ்லொவேனியா
  • ஸ்லொவாக்கியா
  • ஸ்பெயின்
  • சுவிற்ஸர்லாந்து
ஆகிய 32 அணிகளும் மோதவிருக்கின்றன.

மேற்படி அணிகள் 8 குழுக்களாகப் பரிக்கப்பட்டு குழு நிலைப் போட்டிகள் முதலில் இடம்பெறவிருக்கிறது.

குழுக்களின் விபரம் :


இந்த குழுக்களின் தேர்வு குலுக்கல் முறையில் கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி இடம்பெற்றது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் தமக்கிடையே தலா ஒருமுறை மோதிக்கொள்ளும் லீக் சுற்று முதலில் இடம்பெறும். தமது குழுவிலே லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள், 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தெரிவாகும் அது முதற்கொண்டு நொக்அவுட் முறையில் போட்டிகள் இடம்பெறும்! இறுதிப் போட்டி ஜீலை மாதம் 11ம் திகதி ஜொகன்னஸ்பேர்க் நகரில் நடைபெறவிருக்கிறது!

No comments:

Post a Comment