வணக்கம்!

உலகக்கிண்ணக் காற்பந்தாட்டம் தொடர்பான செய்திகள், தவகல்கள், அலசல்கள் என்பனவற்றைத் தமிழில் தருவதே இவ்வலைப்பூவின் நோக்கம்! விரைவில் பல பிரபல மற்றும் முன்னணி விளையாட்டு தொடர்பான பதிவர்கள் எம்முடன் இத்தளத்தில் தமது ஆக்கங்களைத் தரவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.!

தொடர்ந்து எம்மாலியன்ற வரை உலகக்கிண்ணக்காற்பந்தாட்டம் 2010 தொடர்பான அனைத்துச் செய்திகளையும், தகவல்களையும் இங்கே பதிவுசெய்யவிருக்கிறோம்!

தங்கள் வருகைக்கு நன்றி!

Thursday, June 10, 2010

இதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010


இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது.
நாளை முதல் உலகம் முழுது கால்பந்துக் காய்ச்சல்..


அநேகமான உலகக் கிண்ண அணிகள் இறுதிக் கட்டப் பயிற்சி ஆட்டங்களை முடித்த்துக் கொண்டு தென் ஆபிரிக்காவில் வந்திறங்கியுள்ளன.

காயங்கள் காரணமாக நாளொரு பிரபலம், நாளொரு நட்சத்திரம் ரசிகர்களுக்கும் தத்தம் அணிகளுக்கும் ஏமாற்றங்களைக் கொடுத்து வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.

மிக முக்கியமாக இங்கிலாந்து,ஜெர்மனி,ஐவரி கோஸ்ட் அணிகளின் தலைவர்களின் வெளியேற்றங்கள் அந்தந்த நாடுகளின் உலகக் கிண்ணக் கனவுகளைக் கிட்டத்தட்ட தவிடுபொடி ஆக்கியிருக்கின்றன.
பிந்திய தகவலாக ஐவரி கொஸ்டின் தலைவர் ட்ரோக்பா கை எலும்பு முறிவிலிருந்து குணமாகி வருவதாகவும் எப்படியாவது முதல் போட்டியில் விளையாடுவார் எனவும் தெரிகிறது.

இன்னும் சில முக்கிய வீரர்கள் தத்தம் அணிகளின் போட்டிகள் நடைபெறும்போது தேவையான உடற் தகுதிகளைப் பெற்று விடுவார்கள் என நம்பப்படுகிறது.

கடைசியாக போர்ச்சுக்கல் அணியின் நாணியும் காயத்தோடு வெளியேறி இருப்பது வேதனை.


இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் சில,பல சிறப்புக்கள்.

முதல் தடவையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் இடம்பெறுகிறது.
ஆபிரிக்க அணிகளின் பங்குபெறுகை இம்முறையே அதிகம்.
ஆஸ்திரேலியக் கண்டத்திலிருந்து இம்முறை இரு அணிகள் பங்குபெறுகின்றன.
எடை குறைந்த பந்து இம்முறை பயன்படுத்தப்பட இருக்கிறது.

அதுபோல இதுவரை எந்தவொரு உலகக் கிண்ணத்தையும் வெல்லாத அணியொன்று முதல் தடவை வெல்லக் கூடிய சாத்தியம் ஸ்பெயின் அணி மூலம் நடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எப்பொழுதும் திறமையான வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் அணி இறுதிவரை போராடக்கூடிய ஆற்றல் மிகுந்தது என வர்ணிக்கப்பட்டாலும் துரதிர்ஷ்டம் மிகுந்த அணி எனக் கருதப்படுகிறது.
இம்முறையாவது அதன் நீண்டகாலக் கனவு பலிக்கும் என்றே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக எப்போதுமே கால்பந்து ராஜாக்களாகத் திகழும் பிரேசில்,ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளும், நீண்ட காலத்தின் பின் பலம் வாய்ந்த அணியாக கணிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து ஆகிய அணிகளும் கணிக்கப்பட்டுள்ளன.

நட்பு உலக சாம்பியன் இத்தாலி இவற்றுக்கெல்லாம் கீழே தான்.

இம்முறை உலகக் கிண்ணம் வெல்லும் சாத்தியமுள்ள அணிகளின் முழுமையான விபரங்களை அறிய..

http://fifa2010-football-worldcup.blogspot.com/2010/06/world-cup-latest-odds.html

அந்தப் பட்டியலில் அதிக கோல்களைப் பெறக்கூடிய வாய்ப்புள்ள வீரராக ஸ்பானிய வீரர் டேவிட் வியா கருதப்படுகிறார்.
இப்போது உச்சநிலை formஇல் உள்ள அற்புதமான வீரர் இவர்.
ஸ்பெயின் தனது கனவுக் கிண்ணத்தைக் கைப்பற்ற இவரும், சக வீரர் டோர்றேசும் தமது உச்சபட்ச ஆட்டத்திறமையை வெளிபடுத்த வேண்டியிருக்கும்.

அடுத்தவர் ஆர்ஜெண்டீனாவின் இளம் புயல் லியோனல் மெஸ்ஸி.
86 இல் டீகோ மரடோனா போல் இம்முறை மெஸ்ஸி என்று கொண்டாடுகிறார்கள் ஆர்ஜெண்டீன ரசிகர்கள்.
அதுவும் மரடோனாவே இம்முறை அணியின் பயிற்றுவிப்பாளர்.


இங்கிலாந்தின் வேன் ரூனியும், பிரேசிலின் பாபியானோவும், நெதர்லாந்தின் வான் பெர்சியும் தத்தம் அணியின் எதிர்பார்ப்புக்களை சுமந்து செல்லும் அந்தந்த அணியின் ஹீரோக்கள்.

இம்முறை முதல் சுற்றில் சில பலம் வாய்ந்த அணிகள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளதனால், முதல் சுற்றிலும் பல விறு விறு ஆட்டங்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பு எமக்கு.

அணிகளின் பிரிவுகள்..
http://fifa2010-football-worldcup.blogspot.com/2010/04/world-cup-2010-groups.html

தென் ஆபிரிக்காவும் வன்முறைகளுக்குப் பெயர் போனது.காலபந்தட்ட வன்முறையாளர்களும் உலகில் மிகவே பிரசித்தம்.
இதனால் முதல் கட்டமாக தென் ஆபிரிக்காவுக்கு வருகை தரவிருந்த கால்பந்தாட்ட வெறியர்கள் அந்தந்த நாடுகளினதும் தென் ஆபிரிக்காவினதும் போலீசார் இணைந்து தடுத்துவிட்டார்கள்.அப்படியும் மீறி வந்தவர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இன்னும் தென் ஆபிரிக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப் பலமாக உள்ளன.

நாளை ஆரம்ப விழாவுடன் போட்டிகளை நடாத்தும் நாடு தென் ஆபிரிக்கா மெக்சிக்கோவை சந்திக்கும் போட்டி முதல் போட்டியாக இடம் பெறவுள்ளது.

 அடுத்த போட்டியாக பிரான்ஸ் எதிர் உருகுவே போட்டி இடம் பெறவுள்ளது.

முதல் சுற்றுப் போட்டிகள் தொடக்கம் அனைத்துப் போட்டிகளுமே இலங்கை,இந்திய நேரங்களின் படி மாலை 5.30, இரவு 8.00, பின்னிரவு 12.30 என்ற நேரங்களிலேயே இடம்பெறுவதால் அனைவருக்கும் வசதியாகப் போகும்.

போட்டிகளின் நேர அட்டவணை
http://www.fifa.com/worldcup/matches/index.html


நேரம் கிடைக்கும்போது தமிழில் இங்கே நாம் இருவரும் பதிவிடுகிறோம்.

அதற்கிடையில் ஆங்கிலத்தில் உடனடிப் பிந்திய தகவல்களை இங்கேயும் பார்க்கலாம்.

http://fifa2010-football-worldcup.blogspot.com

Friday, April 23, 2010

போட்டிகள் நடைபெறவிருக்கும் நகரங்களும், மைதானங்களும்!

தென்னாபிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவிருக்கும் நகரங்களும், மைதானங்களும்!

ஜொகன்னஸ்பேர்க்டேர்பன்கேப் டவுண்ஜொகன்னஸ்பேர்க்ப்ரெதோரியா
சொக்கர் ஸிட்டிமோஸஸ் மாபிடா மைதானம்கேப் டவுண் மைதானம்எலிஸ் பார்க் மைதானம்லொஃப்டஸ் வேஸ்வெல்ட் மைதானம்
26°14′5.27″S 27°58′56.47″E29°49′46″S 31°01′49″E33°54′12.46″S 18°24′40.15″E26°11′51.07″S 28°3′38.76″E25°45′12″S 28°13′22″E
கொள்ளளவு: 94,700கொள்ளளவு: 70,000கொள்ளளவு: 69,070கொள்ளளவு: 62,567கொள்ளளவு: 51,760
Soccer City in Johannesburg.jpgMoses Mabhida World Cup Stadium.jpgCTSRW01.JPGEllis Park Stadium 2009.jpgLoftus Versfeld - Pretoria.jpg
போர்ட் எலிஸபத்ப்ளோம்ஃபொன்டைன்பொலொக்வேன்ரஸ்ரன்பேர்க்நெல்ஸ்ப்ருய்ட்
நெல்சன் மண்டேலா பே மைதானம்ப்ரீ ஸ்ரேற் மைதானம்பீட்டர் மோகாபா மைதானம்றோயல் பஃபொகேங் மைதானம்மொம்பேலா மைதானம்
33°56′16″S 25°35′56″E29°07′02.25″S 26°12′31.85″E23°55′29″S 29°28′08″E25°34′43″S 27°09′39″E25°27′42″S 30°55′47″E
கொள்ளளவு: 48,000கொள்ளளவு: 48,000கொள்ளளவு: 46,000கொள்ளளவு: 44,530கொள்ளளவு: 43,500
View of Nelson Mandela Stadium.jpgSouth Africa-Bloemfontein-Free State Stadium01.jpgEstadio Peter Mokaba.JPGRoyal Bafokeng Stadium.jpgSeats and field of Mbombela Stadium.jpg

காற்பந்து உலகக்கிண்ணம் 2010 - அணிகள்

உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஜீன் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெற இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் கால்பந்து விளையாடும் தேசங்களிடையேயிருந்து கண்டம் / பிரதேச ரீதியாக இறுதிச்சுற்றுக்களில் தென்னாபிரிக்காவில் விளையாட 32 அணிகள் தகுதிபெற்றிருக்கின்றன. 

கண்ட ரீதியாக தகுதி பெற்ற அணிகள்

ஆசியா (ஆசிய காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • அவுஸ்திரேலியா
  • ஜப்பான்
  • வட-கொரியா
  • தென்-கொரியா


ஆபிரிக்கா (ஆபிரிக்கக் காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • அல்ஜீரியா
  • கமரூன்
  • ஐவரிக்கோஸ்ட்
  • கானா
  • நைஜீரியா
  • தென்னாபிரிக்கா (போட்டி நடத்தும் நாடு)


வட-அமெரிக்கா (வட,மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • அமெரிக்கா
  • மெக்ஸிகோ
  • ஹொண்டூரஸ்


தென்-அமெரிக்கா (தென் அமெரிக்கக் காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • ஆர்ஜன்டீனா
  • பிரேசில்
  • உருகுவே
  • பரகுவே
  • சிலி


ஓசியானியா (ஓசியானியா காற்பந்தாட்டச் சம்மேளனம்)


  • நியூசிலாந்து

ஐரோப்பா (ஐரோப்பிய காற்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம்)

  • இங்கிலாந்து
  • ஃபிரான்ஸ்
  • ஜேர்மனி
  • டென்மார்க்
  • கிரீஸ்
  • இத்தாலி
  • நெதர்லாந்து
  • போர்த்துக்கல்
  • சேர்பியா
  • ஸ்லொவேனியா
  • ஸ்லொவாக்கியா
  • ஸ்பெயின்
  • சுவிற்ஸர்லாந்து
ஆகிய 32 அணிகளும் மோதவிருக்கின்றன.

மேற்படி அணிகள் 8 குழுக்களாகப் பரிக்கப்பட்டு குழு நிலைப் போட்டிகள் முதலில் இடம்பெறவிருக்கிறது.

குழுக்களின் விபரம் :


இந்த குழுக்களின் தேர்வு குலுக்கல் முறையில் கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி இடம்பெற்றது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் தமக்கிடையே தலா ஒருமுறை மோதிக்கொள்ளும் லீக் சுற்று முதலில் இடம்பெறும். தமது குழுவிலே லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள், 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தெரிவாகும் அது முதற்கொண்டு நொக்அவுட் முறையில் போட்டிகள் இடம்பெறும்! இறுதிப் போட்டி ஜீலை மாதம் 11ம் திகதி ஜொகன்னஸ்பேர்க் நகரில் நடைபெறவிருக்கிறது!

2010 உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள்!

2010 FIFA உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள் வரும் ஜீன் மாதம் தென்னாபிரிக்காவில் இடம்பெறுகிறது. உலகில் அதிகமானவர்களால் இரசிக்கப்படும் மற்றும் உலகில் அதிகளவு நாடுகளில் விளையாடப்படும் விளையாட்டாக காற்பந்தாட்டமே காணப்படுகிறது. அத்தகைய பிரபலமான விளையாட்டின் உலகளவிலான உயர்ந்த விருது உலகக்கிண்ணமாகும்! கிரிக்கட்டே இன்று தமிழர்களின் ஆதர்ஷ விளையாட்டாக மாறியிருக்கும் வேளையில் உலகக்கிண்ணக் காற்பந்தாட்டம் தொடர்பான செய்திகளைத் தமிழில் தருவதற்காக இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பான செய்திகள், அலசல்கள், அணிகள் தொடர்பான தகவல்கள் என்பனவெல்லாம் இவ்வலைப்பூவினில் இடம்பெறும். 

- நன்றி.