ஜொகன்னஸ்பேர்க் | டேர்பன் | கேப் டவுண் | ஜொகன்னஸ்பேர்க் | ப்ரெதோரியா |
---|---|---|---|---|
சொக்கர் ஸிட்டி | மோஸஸ் மாபிடா மைதானம் | கேப் டவுண் மைதானம் | எலிஸ் பார்க் மைதானம் | லொஃப்டஸ் வேஸ்வெல்ட் மைதானம் |
26°14′5.27″S 27°58′56.47″E | 29°49′46″S 31°01′49″E | 33°54′12.46″S 18°24′40.15″E | 26°11′51.07″S 28°3′38.76″E | 25°45′12″S 28°13′22″E |
கொள்ளளவு: 94,700 | கொள்ளளவு: 70,000 | கொள்ளளவு: 69,070 | கொள்ளளவு: 62,567 | கொள்ளளவு: 51,760 |
![]() | ![]() | ![]() | ![]() | |
போர்ட் எலிஸபத் | ப்ளோம்ஃபொன்டைன் | பொலொக்வேன் | ரஸ்ரன்பேர்க் | நெல்ஸ்ப்ருய்ட் |
நெல்சன் மண்டேலா பே மைதானம் | ஃப்ரீ ஸ்ரேற் மைதானம் | பீட்டர் மோகாபா மைதானம் | றோயல் பஃபொகேங் மைதானம் | மொம்பேலா மைதானம் |
33°56′16″S 25°35′56″E | 29°07′02.25″S 26°12′31.85″E | 23°55′29″S 29°28′08″E | 25°34′43″S 27°09′39″E | 25°27′42″S 30°55′47″E |
கொள்ளளவு: 48,000 | கொள்ளளவு: 48,000 | கொள்ளளவு: 46,000 | கொள்ளளவு: 44,530 | கொள்ளளவு: 43,500 |
![]() | ![]() | ![]() | ![]() |
Friday, April 23, 2010
போட்டிகள் நடைபெறவிருக்கும் நகரங்களும், மைதானங்களும்!
தென்னாபிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவிருக்கும் நகரங்களும், மைதானங்களும்!
Labels:
அறிமுகம்,
உலகக்கிண்ணம்,
காற்பந்தாட்டம்,
தகவல்கள்,
மைதானங்கள்
காற்பந்து உலகக்கிண்ணம் 2010 - அணிகள்
உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஜீன் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெற இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் கால்பந்து விளையாடும் தேசங்களிடையேயிருந்து கண்டம் / பிரதேச ரீதியாக இறுதிச்சுற்றுக்களில் தென்னாபிரிக்காவில் விளையாட 32 அணிகள் தகுதிபெற்றிருக்கின்றன.
ஆசியா (ஆசிய காற்பந்தாட்டச் சம்மேளனம்)
- அவுஸ்திரேலியா
- ஜப்பான்
- வட-கொரியா
- தென்-கொரியா
ஆபிரிக்கா (ஆபிரிக்கக் காற்பந்தாட்டச் சம்மேளனம்)
- அல்ஜீரியா
- கமரூன்
- ஐவரிக்கோஸ்ட்
- கானா
- நைஜீரியா
- தென்னாபிரிக்கா (போட்டி நடத்தும் நாடு)
வட-அமெரிக்கா (வட,மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் காற்பந்தாட்டச் சம்மேளனம்)
- அமெரிக்கா
- மெக்ஸிகோ
- ஹொண்டூரஸ்
தென்-அமெரிக்கா (தென் அமெரிக்கக் காற்பந்தாட்டச் சம்மேளனம்)
- ஆர்ஜன்டீனா
- பிரேசில்
- உருகுவே
- பரகுவே
- சிலி
ஓசியானியா (ஓசியானியா காற்பந்தாட்டச் சம்மேளனம்)
- நியூசிலாந்து
ஐரோப்பா (ஐரோப்பிய காற்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம்)
- இங்கிலாந்து
- ஃபிரான்ஸ்
- ஜேர்மனி
- டென்மார்க்
- கிரீஸ்
- இத்தாலி
- நெதர்லாந்து
- போர்த்துக்கல்
- சேர்பியா
- ஸ்லொவேனியா
- ஸ்லொவாக்கியா
- ஸ்பெயின்
- சுவிற்ஸர்லாந்து
ஆகிய 32 அணிகளும் மோதவிருக்கின்றன.
மேற்படி அணிகள் 8 குழுக்களாகப் பரிக்கப்பட்டு குழு நிலைப் போட்டிகள் முதலில் இடம்பெறவிருக்கிறது.
குழுக்களின் விபரம் :
இந்த குழுக்களின் தேர்வு குலுக்கல் முறையில் கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி இடம்பெற்றது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் தமக்கிடையே தலா ஒருமுறை மோதிக்கொள்ளும் லீக் சுற்று முதலில் இடம்பெறும். தமது குழுவிலே லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள், 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தெரிவாகும் அது முதற்கொண்டு நொக்அவுட் முறையில் போட்டிகள் இடம்பெறும்! இறுதிப் போட்டி ஜீலை மாதம் 11ம் திகதி ஜொகன்னஸ்பேர்க் நகரில் நடைபெறவிருக்கிறது!
Labels:
அணிகள்,
அறிமுகம்,
உலகக்கிண்ணம்,
காற்பந்தாட்டம்,
தகவல்கள்
2010 உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள்!
2010 FIFA உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகள் வரும் ஜீன் மாதம் தென்னாபிரிக்காவில் இடம்பெறுகிறது. உலகில் அதிகமானவர்களால் இரசிக்கப்படும் மற்றும் உலகில் அதிகளவு நாடுகளில் விளையாடப்படும் விளையாட்டாக காற்பந்தாட்டமே காணப்படுகிறது. அத்தகைய பிரபலமான விளையாட்டின் உலகளவிலான உயர்ந்த விருது உலகக்கிண்ணமாகும்! கிரிக்கட்டே இன்று தமிழர்களின் ஆதர்ஷ விளையாட்டாக மாறியிருக்கும் வேளையில் உலகக்கிண்ணக் காற்பந்தாட்டம் தொடர்பான செய்திகளைத் தமிழில் தருவதற்காக இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பான செய்திகள், அலசல்கள், அணிகள் தொடர்பான தகவல்கள் என்பனவெல்லாம் இவ்வலைப்பூவினில் இடம்பெறும்.
- நன்றி.
Labels:
அறிமுகம்,
உலகக்கிண்ணம்,
காற்பந்தாட்டம்,
தகவல்கள்
Subscribe to:
Posts (Atom)